முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஞ்சித்தை பாராட்டிய வெங்கட் பிரபு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      சினிமா
Ranjit-Venkat-Prabhu 2022-0

Source: provided

நீலம் புரொடக்சன்ஸ் - யாழி பிலிம்ஸ் தயாரித்து பா. ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ், துஷாரா விஜயன் நடிக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது.‌ ஆகஸ்ட் 31 தேதி தியேட்டர்களில் வெளியாவதையொட்டி, இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காளிதாஸ் கலையரசன், துஷாரா விஜயன், இயக்குநர் பா. வெங்கட், வெற்றி மாறன், வெங்கட் பிரபு, சசி,  சாண்டி மாஸ்டர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு,   ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குருவை மிஞ்சிய சிஷ்யன் தான் பா. ரஞ்சித்.  தற்போது பார்க்கும் போது, ரஞ்சித் எவ்வளவு பேரை வளர்த்து விட்டிருக்கிறார் என்று தெரிகிறது. நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்க்கும் போது மிரண்டு விட்டேன். நிச்சயமாக இன்டர்நேஷனல் பிலிம் பார்த்த மாதிரி இருந்தது எனவும், தென்றல் வந்து தீண்டும் போது பாடல் ரஞ்சித் பாடும் போது அருமையாக இருந்தது என்று கூறினார். பின்னர் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், நிறைய விஷயங்களை வெங்கட் பிரபுவிடம் கற்றுக் கொண்டேன். சென்னை 28 மாதிரி வெற்றி படமாக நம்மால் எடுக்க முடியும் என்று எண்ணினேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து