முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப். 8ல் வெளியாகும் ஆரியாவின் கேப்டன்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      சினிமா
Arya s-captain 2022-08-29

Source: provided

Think Studios தயாரிப்பு நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்க சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன்.  டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன்  கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு சமீபத்தில்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆர்யா, நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார். ஒரு பெரிய மிருகத்துடன் சண்டை போடும் வகையில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது என்றார். இப்படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து