முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மொழிகளில் வெளியாகும் பிரம்மாஸ்திரா பாகம் 1

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      சினிமா
Brahmastra 2022-08-29

Source: provided

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து வழங்க, அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா பாகம் 1. மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில்  அடுத்த மாதம் 9 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தினை தென்னிந்திய மொழிகளில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வெளியிடுகிறார். இதனையொட்டி, சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய  ராஜமௌலி, இந்த திரைப்படம் 8 வருட கடின உழைப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் மிகச்சிறந்த பங்களிப்பினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் கூறியுள்ளது. இந்த திரைப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து