முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      இந்தியா
supreme-court 2022-08-29

Source: provided

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பிரான்ஸ் நாட்டின் டசால்டு நிறுவனத்திடமிருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்போது முறைகேடு நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018 டிசம்பர் 14-ம் தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற டசால்டு நிறுவனம் இந்திய இடைத்தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரான்ஸ் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் இதனால் ரபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் எம் எல் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் ரவிந்திர பட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும், மனுதாரர் மனுவை திரும்பப்பெறவில்லை என்றால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என கோர்ட் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். இதையடுத்து, இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து