முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2022      உலகம்
Najeeb-Rozma 2022 09 02

Source: provided

கோலாலம்பூர் : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2009 முதல் 2018 வரை மலேசியாவின் பிரதமராக நஜீப் ரஸாக் பொறுப்பு வகித்த போது, அந்நிய முதலீடுகளை கவா்வதற்காக உருவாக்கப்பட்ட மலேசியா மேம்பாட்டு நிறுவனம் மூலம் மொத்தம் 4.2 கோடி டாலரை சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்து கொண்டதாக ரோஸ்மா மீது கோலாலம்பூா் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அந்த குற்றச்சாட்டை நேற்று முன்தினம் உறுதி செய்த நீதிமன்றம், ரோஸ்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. ஏற்கெனவே மலேசியா மேம்பாட்டு நிறுவன முறைகேடு வழக்கில் நஜீப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து