முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு பாகமாக தயாராகிறது வெற்றிமாறனின் விடுதலை

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      சினிமா
Vetrimaran 2022 09 03

Source: provided

வெற்றிமாறன் இயக்கத்தில்,  விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் வழங்கும் இப்படத்தினை RS Infotainment எல்ரெட் குமார் இப்படத்தினை தயாரிக்கிறார். விடுதலை பாகம் ஒன்றின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் ‌ பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதே நேரம் சிறுமலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் விடுதலை பாகம் இரண்டின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக  10 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு  இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரியுடன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் பல முன்னணி  நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்துக்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விடுதலை பாகம் 1 & விடுதலை பாகம் 2 ஆகிய இரு  படங்களையும் Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில், முதல் பாகத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து