முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு 5-வது இடம்

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      உலகம்
India 2022-09-03

Source: provided

நியூயார்க் : சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீடு அளவில் உலக பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கடைசி மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பொருளாதார வளர்ச்சியில் உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. 

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 5-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா பிரபல நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. நடப்பாண்டில் 7.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டு இருந்தது. 

ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் இந்த சதவீதத்தை எட்ட முடியவில்லை என சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இங்கிலாந்தில் விரைவில் ஆட்சி தலைமை மாற உள்ளது. தற்போது அங்கு பொருளாதார வீழ்ச்சி அடைந்து உள்ளதால் புதிதாக பதவி ஏற்க உள்ள பிரதமருக்கு இது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார பின்னடைவு 2024-ம் ஆண்டு வரை நீடிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து