முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 6-ம் தேதி திறப்பு

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 09 03

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 6-ம் தேதி திறக்கப்படுகிறது.

கேரளாவில் ஒணம் பண்டி கையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் வரும் 6-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.

தொடர்ந்து மறுநாள் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், களபாபி ஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜை, வழிபாடுகளும் நடைபெறும். முன்னதாக 8-ம் தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, செப்டம்பர் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நிலக்கல் மகாதேவர் கோவிலில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறும். ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை 10-ம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 16-ம் தேதி திறக்கப்படும். 21-ம்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து