முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2022      சினிமா
Sibiraj 2022 09 05

Source: provided

சிபி சத்யராஜ் நடிப்பில் ஒரு இன்வஸ்டிகேசன் திரில்லர் படமாக உருவாகவுள்ள புதிய படத்தின் பட பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்தில் சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அவருடன் 25  முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வகையில் வித்தியாசமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளமது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கும் படத்தினை புரடக்சன் நம்பர் 1 என்ற தலைப்பில் லதா பாபு மற்றும் துர்க்கைனி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் திலீப், கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா,  தங்கதுரை, குரேஷி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஒளிப்பதிவு கார்த்திக் வெங்கட் ராமன்,  இசை  சுந்தரமூர்த்தி KS, கலை அருண் சங்கர் துரை, ஸ்டண்ட்ஸ் சக்தி சரவணன்,  எடிட்டிங்  லாரன்ஸ் கிஷோர், ஸ்டில்ஸ் ராஜ், எக்ஸிகியூட்டிவ் மேனேஜர் பாரதிராஜா. சென்னை நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில்  ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து