முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ஷூ

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2022      சினிமா
Yogi-Babu 2022 09 05

Source: provided

நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் ஷூ. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்றது. இவ்விழாவினில் நக்கீரன் கோபால் மூத்த இயக்குனர் கே. பாக்யராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் தயாரிப்பாளரும் நடிகருமான கார்த்திக் பேசுகையில், இது எங்களுடைய முதல் திரைப்படம். குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கபட்ட கதை. இந்தப்படத்தை இயக்குநர் கல்யாண் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தப்படத்தை தியேட்டரில் நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுகொண்டார். பின்னார் பேசிய நக்கீரன் கோபால், சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள் அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்தத்திரைபடத்திற்கு எனது வாழ்த்துகள் என்றார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து