முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி : அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
Tirupati 2022 09 11

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று வெகுவிமர்சையாக கருடசேவை நிகழ்ச்சி நடந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கருடவாகன சேவை நடக்கிறது. பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் இரவு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடந்தது.

இதை முன்னிட்டு, உற்சவர் ஏழுமலையான் சர்வ நிலையில், அலங்கார திருக்கோலம் பூண்டு கோவிலிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சாமிக்கு தீப, நைவேத்திய சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கருடவாகன சேவை நடந்தது . பவுர்ணமி கருட சேவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சாமி தரிசனத்திற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. அதனை தாண்டி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். நேற்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

வருகிற 27-ம் தேதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இந்த விழாவில் கருட சேவை இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து