முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரோல் படத்துக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி

செவ்வாய்க்கிழமை, 13 செப்டம்பர் 2022      சினிமா
Vijay-Sethupathi 2022 09 13

Source: provided

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னணியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள படம் பரோல்.  சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டார், இப்படம் குறித்து இயக்குநர் துவாரக் ராஜா கூறியதாவது, இப்படத்திற்கு குரல் தந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு நன்றி. டிரெய்லரில் மட்டுமல்ல படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் தந்துள்ளார். படம் முடித்தவுடனே அவரிடம் போட்டுக் காட்டினேன், படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக சொன்னார் என்றார். மேலும், இப்படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் படமாகவும், தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான படைப்பாகவும் இருக்கும் என்று கூறினார். இப்படத்தின் R S கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்துக்கு இசை ராஜ் குமார் அமல், ஒளிப்பதிவு மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் முனீஸ், கலை - அருண் குமார்.A, செயல் - ஓம் பிரகாஷ் S.D, மக்கள் தொடர்பு  சதீஷ் AIM, கிரியேட்டிவ் ப்ரோமோஷன்கள் - CTC MediaBoy, படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து