முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்ப்படும் : அமைச்சர் பொன்முடி தகவல்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      தமிழகம்
ponmudi-2022 09 12

Source: provided

சென்னை : கலை, அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் தெரிவித்ததாவது., நீட் தேர்வு வேண்டாம் என முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 

பொறியியல் கல்லூரியில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதல்வர் அறிவித்து உள்ள நான் முதல்வன் திட்டம் மூலம் கலை, அறிவியில் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.  தொழில் முனைவர்களாக மாற்றும் வகையில் உலம், பன்னாட்டு அறிவியல் குறித்தும் கல்வி கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து