முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      தமிழகம்
RBU 2022-08-01

Source: provided

மதுரை : மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைப்பது சரியானது இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- தமிழகத்தில் 2.25 இலட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு பேரடியாக உள்ளது.

மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு, கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார், மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை.

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல, அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து