முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலத்தில் பனைத் திருவிழா 25-ம் தேதி நடைபெறுகிறது : பனை வாரிய தலைவர் - எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
Needamangalam 2022 09 18

Source: provided

சென்னை : 25-ம் தேதி நீடாமங்கலத்தில் பனைத் திருவிழா நடைபெறுகிறது. இதில்  ஒரே நேரத்தில் 1000 நபர்கள் பனையோலைக் காத்தாடி சுற்றி சாதனை படைக்கின்றனர். 

பசுமை விகடன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ராஜேஸ்வரி திருமண மகாலில் வரும் 25-ம்  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பனைத் திருவிழாவினை நடத்துகின்றனர்.

விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.கே.ஜானகிராமன் தலைமை வகிக்கிறார். கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்கிறார். பனைத் திருவிழாவினை தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஏ.நாராயணன் தொடங்கி வைக்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக எம்எல்ஏக்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, திருத்துறைப்பூண்டி கே.மாரிமுத்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொது மேலாளர் வி.குமார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.சுந்தர்ராஜ், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி, எழுத்தாளர் சோ.தர்மன், திரைப்பட இயக்குநர் ஏ.சற்குணம் உட்பட பேராசிரியர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கும்பகோணம் மாநகராட்சி கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் பசுமை எட்வின் நன்றி கூறுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து