முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருகம்பாக்கத்தில் புதுமுக நடிகை தூக்கிட்டு தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      சினிமா
Jessica 2022 09 18

Source: provided

சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் புதுமுக நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் நடித்தவர் தீபா.  அவருக்கு வயது 29. இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் நடிகை தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்  போலீசாரின் விசாரணையில்,  நடிகை தீபாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் அதில்,   நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நடிகை தீபா வண்ணாரப் பேட்டையை சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, சாகப்போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் சக நண்பர்களுடன் அங்கு சென்று பார்ப்பதற்குள் தீபா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தீபாவின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து