முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதல் : கணவன், மனைவி உள்பட 6 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
Omni Bus 2022 09 18

Source: provided

சேலம் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் தீபா என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக தீபாவின் உறவினர்கள் 7 பேர் சென்னைக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.  இதற்காக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் அவர் டிக்கெட் பதிவு செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு அந்த பஸ்சில் செல்வதற்காக சீர்வரிசை பொருட்களுடன் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நின்றனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்தது. பயணிகளை ஏற்றுவதற்காக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சீர்வரிசை பொருட்களை பஸ்சின் பின்பகுதியில் ஏற்றினர். 

கிளீனர் உதவியுடன் லக்கேஜ் பெட்டி திறந்து சீர்வரிசை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டிருந்த போது சேந்தமங்கலத்தில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, எதிர்பாராதவிதமாக அந்த பஸ்சின் பின்னால் சீர்வரிசை பொருட்கள் ஏற்றிக் கொண்டிருந்த இருந்த 7 பேர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. 

இந்த விபத்தில், பெத்தநாயக்கன்பாளையம், சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவரது மகன் ரவிக்குமார், உறவினரான, தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்த செந்தில்வேலன், சுப்பிரமணி மற்றும் ஆம்னி பஸ்சின் கிளீனர் சேலத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அருகில் நின்ற திருநாவுக்கரசுவின் மனைவி விஜயா மற்றும் பஸ்சில் இருந்த 3 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயா பரிதாபமாக இறந்தார். 

இவரது உறவினர் ஜெயபிரகாஷ்  உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.  இதனிடையே விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் டிரைவர் பரமேஸ்வரனும் கைது செய்யப்பட்டார். இவர் ஆம்னி பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியதாலேயே இந்த சோகவிபத்து நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து