முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

120 அடியாக தொடர்ந்து நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
Mettur dam 2022-08-02

Source: provided

சேலம் : மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளின் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.   மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.   அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து