முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ளூ காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : பரவி வரும் ப்ளூ காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழகத்தில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், இங்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்கவும், இந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ப்ளூ காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து