முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் முதல் புதன் தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      தமிழகம்
Ma Subramanian 2022 01 10

Source: provided

சென்னை : தமிழகத்தில் அக்டோபர் முதல் புதன் கிழமை தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் 37-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.  சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் அறிவிப்பின்படி வருகிற 30-ம் தேதி மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். அதன்படி தற்போது 12 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும், முகாமில் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில், இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 5.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெறுகிறது. அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, அக்டோபர் முதல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து