முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதியா?: அமெரிக்க குற்றச்சாட்டுக்கு வடகொரியா அரசு மறுப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      உலகம்
North-Korean-2022-09-22

வடகொரியாவிலிருந்து உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது. 

உக்ரைன் போரால் ரஷ்யாவின் ஆயுத இருப்பு குறைந்து விட்டதாக வடகொரியாவிடம் தெரிவித்து, அங்கிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யப் போவதாக ரஷ்யா தெரிவித்தது.  வட கொரியாவிடம் இருந்து பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை ரஷ்யா வாங்கிக் கொண்டிருந்தது. இவற்றின் மூலம் ரஷ்யா கடும் நெருக்கடியில் இருந்தது தெரிகிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கையில் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கூறப்பட்டது. 

இதனிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கவில்லை என வடகொரியா மறுத்துள்ளது. வடகொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி கூறியதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களையோ வெடிமருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை. அவற்றை ஏற்றுமதி செய்ய நாங்கள் திட்டமிட மாட்டோம். ஆயுதக் கொடுக்கல் வாங்கல் பற்றிய வதந்தியை அமெரிக்கா மற்றும் சில நாடுகள் பரப்பி வந்தன. இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை எச்சரிக்கிறோம். அதே வேளையில், இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து