முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் சுப்பிரமணியன்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      சினிமா
Ma-Subramaini 2022-09-22

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர். வடிவேலுவுடன் பல படங்களில் இவர் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே நடிகர் போண்டா மணி, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர். பார்த்திபன் போன் மூலம் தொடர்பு கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், சாய்ராம் என்ற மகன், சாயம்மாள் என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து