முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      உலகம்
United-nations

Source: provided

வாஷிங்டன்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை  நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

உலக தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார்.

இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.

இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்றும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும். எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து