முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளிக்கு பெண் வீரரை அனுப்பும் சவுதி

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      உலகம்
Saudi-Arabia 2022--09-23

Source: provided

துபாய் : அடுத்த ஆண்டு பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் விஷன் 2030 என்ற பெயரில் பல்வேறு நவீனமய திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றது.

பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த 2018-ம் ஆண்டு நீக்கப்பட்டது. மேலும், கால்பந்து மைதானத்துக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். முதல் முதலாக பெண் தூதுவர் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது பெண் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சவுதி விண்வெளி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி விண்வெளி வீரர்கள் திட்டம், நாட்டின் லட்சிய திட்டமான விஷன் 2030-ன் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது மனிதர்களுக்கு சிறந்த சேவை செய்ய உதவும்.

விண்வெளி வீரர்களில் ஒருவர் சவுதி பெண்ணாக இருப்பார்.  அவருடைய விண்வெளி சேவை, நாட்டின் வரலாற்றிலேயே முதலாவதாக இருக்கும். சொந்த நாட்டு  விண்வெளி வீரர்களை அனுப்பும் இலக்குடன் பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து