முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு முந்தைய நாள் பயணம்: அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Bus 2022--09-21

Source: provided

சென்னை : தீபாவளிக்கு முந்தைய நாள் பயணம் மேற்கொள்ள அரசு விரைவு பஸ்களில் நேற்று முன்பதிவு தொடங்கியது. 

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு கடந்த 21-ம் தேதி தொடங்கியது .

30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ம் தேதி பயணம் செய்ய கடந்த 21-ம் தேதி முன்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளிக்கு முன்தினம் பயணம் செய்ய நேற்று முதல் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது.  மேலும் www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து