முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணித்தால் 10 ஆண்டு சிறை : ரயில்வே போலீஸ் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Train 2022 09 03

Source: provided

சென்னை : ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. 

மின்சார ரயில்களில் அட்டூழியம் செய்யும் மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் பயணம் செய்தனர்.

சென்னை - திருத்தணி மின்சார ரயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த மாணவனை நேற்று முன்தினம் போலீஸ் கைது செய்தது. கத்தி வைத்திருந்து போலீசை கண்டதும் தப்பி ஓடிய மாணவன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், அரிவாள், கத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய  ரயில்வே சட்டப்பிரிவு 153-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்திருக்கிறது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். விஷம செயல்களில் ஈடுபட கூடாது என ரயில்வே போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து