முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பெண்கள் அணியை இந்தியா 'ஒயிட்வாஷ்' செய்யுமா ?

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      விளையாட்டு
Women-team 2022--09-23

ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வென்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி என்ற ரசிகர்கள் இடையே மேலோங்கியுள்ளது.

தொடரை வென்றது...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

கேப்டன் அபாரம்...

இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கு கிறது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மந்தனா, யாஸ்திகா, ஹர்லீன் தியோல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் உள்ளனர். அதேசமயம், தொடரை இழந்துள்ள இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற போராடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து