முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டுக் காவலில் சீன அதிபர்?: பரவும் சமூக வலைதள செய்தியால் பரபரப்பு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      உலகம்
Xi-Jinping 2022--09-24

Source: provided

பெய்ஜிங் : சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக இணையம் முழுவதும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், ஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று விட்டு கடந்த 16-ம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  சீன அரசை ராணுவம் கைப்பற்றி விட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் விடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து