முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவு மேலாண்மையில் தோல்வி: பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      இந்தியா
Punjab 2022--09-24

Source: provided

புதுடெல்லி : கழிவு மேலாண்மையில் தோல்வி காரணமாக பஞ்சாப் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. இதில் பஞ்சாப் அரசின் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக கழிவு மேலாண்மையில் அந்த அரசின் தோல்வி காரணமாக கழிவு உற்பத்திக்கும், வெளியேற்றத்துக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மாநிலத்தில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விரிவான திட்டம் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்து உள்ளது. இதில் பஞ்சாப் அரசு ஏற்கனவே ரூ.100 கோடியை செலுத்தி இருந்தது. மீதமுள்ள ரூ.2,080 கோடியை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான தேசிய பசுமை தீர்ப்பாய பிரிவு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து