முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த ஜூலையில் மோடியை கொல்ல திட்டமிடப்பட்டதா? - என்.ஐ.ஏ. தகவலால் அதிர்ச்சி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      இந்தியா
modi-2022-09-01

Source: provided

புதுதில்லி : பீகார் மாநிலம், பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சோ்த்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட புகாரின்பேரில், தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினா் இணைந்து நாட்டின் 15க்கும் மேற்பட்ட  மாநிலங்களில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் 106 பேரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் பல முக்கியமான ஆவணங்கள், புத்தகங்கள், கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றினா். சுமார் 200 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், இதற்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சியை தகவலை வெளியிட்டுள்ளது. 

மேலும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை சேகரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கேரளத்தில் கைது செய்யப்பட்ட சாதிக் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுகுறித்த தகவல் தெரியவந்ததாக தேதிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து