முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த இசையமைப்பாளருக்கு விருது

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Udayakumar 2022-09-24

Source: provided

சேரா கலையரசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் குழலி. சிறந்த இசையமைப்பாளர் விருது உள்ளிட்ட 4 விருதுகளை குழலி பட இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் தட்டிச்சென்றுள்ளார். இது குறித்து பேசிய அவர்,  எனது முதல் படம் பிரண்ட்ஷிப். இப்படத்துக்கு சிறந்த புதுமுக இசையமைப்பாளர் என்ற எடிசன் விருது கிடைத்தது.  குழலி படத்தில் புல்லாங்குழலை வைத்து வித்தியாசமாக முயற்சி எடுத்திருக்கிறேன்., திண்டுக்கல், மதுரை, வத்தலகுண்டு பகுதிகளுக்கு சென்று கும்மி, தப்பிசை, குலவை போன்ற விஷயங்களை பிரத்யேகமாக பதிவு செய்தோம் என்றார். குழலி படத்திற்கு மொத்தம் 16 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல்களுக்காக எனக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. மாநில விருதும் கிடைக்கும் என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்று கூறினார். தற்போது, நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் நடிக்க, மதி இயக்கத்தில் அஜினமோட்டோ படத்தில் இசையமைத்திருக்கிறேன். மைடியர் லிசா படத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறேன். இது தவிர இரண்டு பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து