முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழலி விமர்சனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Ku-ali-vimarca-am 2022-09-2

Source: provided

காக்கா முட்டை விக்னேஷ் நாயகி ஆரா இணைந்து நடித்திருக்கும் கிராமத்துக் காதல் கதைதான் இந்த குழலி திரைப்படம். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த நாயகன் விக்னேஷ் நாயகி ஆரா இருவரும் ஒரேவகுப்பில் பனிரெண்டாவது படிக்கிறார்கள். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அப்புறம் என்ன என்பது தான் படத்தின் கதையோட்டம்.நாயகன் விக்னேஷ், விடலைப் பருவத்துக்குரிய நடிப்பில் அசத்தியிருக்கிறார்.நாயகி ஆரா அழகான சுதந்திரப்பெண்ணாக வலம் வருகிறார். எங்க வீட்லயெல்லாம் தண்ணி குடிப்பிங்களா? என்று நாயகனின் அம்மா கேட்டவுடன் ஆரா செய்யும் செயல் சாதிய அடித்தளத்தை ஆட்டி விடுகிறது. அவருடைய முடிவு பதற வைக்கிறது. நாயகியின் அம்மாவாக வரும் செந்திகுமாரி இறுதிக்காட்சியில் செய்யும் செயல் சிறப்பு. மஹா, ஷாலினி, அலெக்ஸ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பாராட்டத்தக்கது. கிராமத்து அழகையும் அழுக்கையும் நம்முன் அச்சாணியாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சமீர். டி.எம்.உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கலாம். அருமையான இசை. காதலுக்காக எதையும் தூக்கிப்போடுகிறவர்கள் மத்தியில் கல்விக்காகக் காதலைத் துறக்கத் துணியும் புதிய இளைஞர்களைக் காட்டி புது நம்பிக்கையூட்டுகிறார் இயக்குநர் செரா.கலையரசன். ஆனால் இறுதியில் நடக்கும் முடிவு தான் இன்றைய எதார்த்தம் என்பது முகத்தில் அறைகிறது. மொத்தத்தில் குழலியை ஒருமுறை சென்று பார்த்து வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து