முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்த : தினசரி கொரோனா பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Covid 2022-09-25

Source: provided

 புது டெல்லி: இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 4 ஆயிரத்து 912-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 610 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 56 லட்சத்து 67 ஆயிரத்து 942 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து