முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஃப்.ஐ-க்கு ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்க்கப்பட்டுள்ளது: லக்னோ சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ தகவல்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      இந்தியா
NIA 2022--09-24

பி.எஃப்.ஐ-க்கு ஹவாலா முறையில் ரூ.120 கோடி சேர்க்கப்பட்டுள்ளதாக லக்னோ சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்ட விரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கடந்த வாரம் சோதனை நடத்தினர். நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

சோதனையை அடுத்து, கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது சபீக் பயத் கைது செய்யப்பட்டார். அதே போல், நாடு முழுவதிலும் அந்த அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைதானார்கள். அவர்களில் 11 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது. மேலும், கேரளாவில் கைது செய்யப்பட்டவர்களில் 11 பேரிடம் 30-ந்தேதி வரை விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை சில தகவல்களை வெளியிட்டு இருந்தது. தற்போது அமலாக்கத்துறையும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக லக்னோவில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதி மன்றத்தில் அளித்த விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாவது:-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை சட்டவிரோத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டி அதனை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. இது, அந்த அமைப்பின் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரூ.120 கோடி வரை வங்கிகளில் டெபாசிட்டாக வைத்துள்ளது. இதில் பெரும் பகுதி ரொக்கமாகவே உள்ளது. சதி நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு சந்தேகத்துக்குரிய நபர்களிடமிருந்து உள் நாட்டிலும், வளைகுடா நாட்டிலுமிருந்து இந்த நிதியை திரட்டி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற பணம் ஹவாலா முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஹவாலா பண பரிமாற்றம் அனைத்தும் அபுதாபியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றுள்ளது. அப்துல் ரசாக் என்ற நிர்வாகி மூலம் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளது.

கத்தார் நாட்டில் பணம் திரட்டும் பணிகளை பாப்பு லர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிறுவனங்களில் ஒருவரான பயாத் என்பவர் மேற்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அப்துல் ரசாக் அபுதாபியில் பணம் திரட்டி உள்ளார். இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், வகுப்புவாத கலவரங்களை தூண்டி, ஒற்றுமையை குலைக்கும் நோக்கத்துடன் உத்தரபிரதேசத்தில் உள்ள பல முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிக்கும் பணிகளிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு விசாரணை அறிக்கையில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து