முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அபேவுக்கு உலக தலைவர்கள் இறுதி அஞ்சலி

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
Japan-Abe 2022-09-27

Source: provided

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் மறைவை அடுத்து நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் 50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, கடந்த ஜூலை 8-ம் தேதி நரா என்ற நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது இறுதிச் சடங்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு) தொடங்கியது. இந்த இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லி சீன் லூங் உள்பட 50 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஷின்ஷோ அபேவின் இறுதிச் சடங்கின்போது ராணுவ வீரர்கள் ஆயிரம் பேர், அவருக்கு 19 சுற்று குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து