முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மஹாலைச் சுற்றி 500 மீட்டருக்கு வணிகம் சார்ந்த நடவடிக்கைக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

உலக அதிசயங்களில் ஒன்றாகவும் பாரம்பரிய தளமாகவும் இருக்கும் தாஜ்மஹாலைச் சுற்றி 500 மீட்டருக்கு எந்தவித வணிகம் சார்ந்த நடவடிக்கையையும் இருக்கக்கூடாது என்று வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஏஎஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆக்ரா வளர்ச்சி ஆணையத்திற்கு இந்த உத்தரவை உறுதிப்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க தாஜ்மஹால் வளாகத்தைச் சுற்றி 500 மீட்டருக்கு எந்த வித வணிக நடவடிக்கைகளும் நடக்காமல் பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளனர்.

தாஜ்மஹால் கட்டிடத்திற்கு 500 மீட்டர் வெளியில் வியாபாரம் செய்ய ஒதுக்கப்பட்ட வியாபாரிகள் இணைந்து 500 மீட்டருக்குள் வியாபாரத்தை விரிவுப்படுத்த அனுமதிகேட்டுத் அவர்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தாஜ்மஹால் யுனஸ்கோ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட உலக பராம்பரிய தளமாக உள்ளது. மேலும் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்கும் வகையில் தாஜ்மஹால் சுற்றி 500 மீட்டருக்கு எந்த வித செயல்களும் அனுமதிக்கப்படுவது இல்லை. 500 மீட்டருக்கு கட்டுமானம் செய்ய, மரக்கட்டைகள், குப்பைகள் மற்றும் விவசாய கழிவுகள் போன்றவற்றை எரிக்கவும் அனுமதி கிடையாது.

1631 காலகட்டத்தில் அரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைப் பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி தாஜ் ட்ரேபீசியம் மண்டலம் (Taj Trapezium Zone) டிசம்பர் 30, 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தாஜ்மஹாலை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க ஆக்ரா, ஃபிரோசாபாத், மதுரா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்டா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டம் வரை சுமார் 10,400 சதுர அடி தாஜ் ட்ரேபீசியம் மண்டலமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து