முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெட் பல்கலை. - தமிழக அரசு இணைந்து ஒரே நாளில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை செய்ய திட்டம்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : அமெட் பல்கலைக் கழகத்துடன் தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறை ஆகியன  இணைந்து  ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவும் பொருட்டு, அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை அன்று அமெட் பல்கலைக்கழகத்தின் சுமார் 4000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கருணாநிதி சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதென்ற ஒரு சமூக சேவைத் திட்டத்தை  முன்னெடுக்க உள்ளனர்.

இத்திட்டத்தின்படி ஒரே நாளில் குறைந்தது ரூ. ஒரு கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராமப் பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சமூக சேவைத்திட்டத்தினை  அமைச்சர் ஆர்.காந்தி, நாளை அக்டோபர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் அமெட் பல்கலைக் கழக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அமெட் பல்கலைக் கழகத்தின் 4000 மாணவர்களைக் கொண்டு ஒரே நாளில் ரூ. ஒரு கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி பொருட்களை விற்பனை செய்ய இயலும் போது தமிழகத்தில் உள்ள  59 பல்கலைக் கழகங்கள் மற்றும் 2140 கல்லூரிகளில் பயிலும் 17,42,000 மாணவர்களை கொண்டு காதி மற்றும் கைத்தறி பொருட்களை முழுமையாக விற்பனை செய்வது எளிதானதாகும் என கருதப்படுகிறது.

எனவே, கருணாநிதி சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காதி, கைத்தறி துணிகள் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி இந்த புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென தமிழக அரசின் சார்பிலும், அமெட் பல்கலைக் கழகத்தின் சார்பிலும் கேட்டுக் கொள்ளப்படுவதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து