முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      உலகம்
Putin 2022--10-01

Source: provided

நியூயார்க் : உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா.வில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் புறக்கணித்தன. 

உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புடின் அறிவித்தார். இதற்கு  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யாவால் கொண்டு வரப்பட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது மற்றும் உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக படைகளை வாபஸ் பெறுமாறு அந்த தீர்மானத்தில் கோரப்பட்டது.

இந்தக் கண்டனத் தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. இதற்கான வாக்கெடுப்பில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவும் வாக்களிப்பதில் இருந்து விலகியது. இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து