முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை 36 ரூபாய் குறைந்தது

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      இந்தியா
Gas-cylinder 2022-10-01

வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.36 குறைந்துள்ளது.ரூ.2045-ல் இருந்து தற்போது ரூ.2009 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியதையடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறைய தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.25.50 குறைத்துள்ளன. சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.36 குறைந்துள்ளது. ரூ.2045-ல் இருந்து தற்போது ரூ.2009 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ரூ.1885-க்கு விற்பனை இருந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1859 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.1959 ஆகவும், மும்பையில் ரூ.1811.50 ஆகவும் விலை இருக்கிறது.

கடந்த மே மாதம் 19-ந்தேதிக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து