முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் தூய்மையான நகரம்: தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்தது இந்தூர்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      இந்தியா
Indore 2022-10-01

Source: provided

புதுடெல்லி : நாட்டின் தூய்மையான நகரம்; தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து இந்தூர் சாதனை படைத்துள்ளது. மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 5 முறை தூய்மை நகரங்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

இதன் மூலம் 'ஸ்வஸ் சர்வேக்‌ஷான்' தூய்மை நகரத்திற்கான விருதை இந்தூர் தொடர்ந்து 6-வது முறையாக வென்றுள்ளது. முதல் இடம் பிடித்துள்ள இந்தூருக்கு வெற்றிக்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு மத்தியபிரதேச அரசு அதிகாரிகளிடம் வழங்கினார். இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், மராட்டியத்தின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 'ஸ்வஸ் சர்வேக்‌ஷான்' திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதல் இடத்தையும், சத்தீஸ்கர் 2-வது இடத்தையும், மராட்டியம் 3-வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து