முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      தமிழகம்
Nallakannu 2022-10-01

Source: provided

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. சுதந்திரப் போராட்ட வீரரான இவருக்கு வயது 97. இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சனிக்கிழமை மாலை அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணிராஜன், "தற்போது நல்லகண்ணு உடல்நிலை சீராக உள்ளது. பொது மருத்துவர்கள் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் குழுவினர் ஆகியோர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவருக்கு எச்.1.என்.1 வைரஸ் அல்லது கரோனா வைரஸின் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து