முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ரா தொடரில் இருந்து இன்னும் விலகவில்லை: பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தகவல்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      விளையாட்டு
Bumra 2022-10-01

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இன்னும் விலகவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 

எலும்பு முறிவு ?

முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார் பும்ரா. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அவரை அங்குள்ள மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். 

விலகவில்லை...

டிஜிட்டல் சேனல் ஒன்றுக்கு கங்குலி தெரிவித்துள்ளதாவது., “பும்ரா, இன்னும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகவில்லை. அவர் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு அடுத்த 2 அல்லது 3 நாட்களில் எடுக்கப்படும்” என்றார்.

ஆஸி.க்கு பயணம்...

வரும் 6-ம் தேதி வியாழன் அன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட அல்லது. அங்கு இந்திய அணி தொடருக்கான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. அக்டோபர் 16-ம் தேதி உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து