முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஸ்னூக்கர் திரைப்படம் சஞ்ஜீவன்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      சினிமா
Sanjeevan 2022-10-01

Source: provided

இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில், மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் என்று கூறப்படும் இப்படத்தின் இயக்குனர் மணி சேகர் இப்படத்தில் நடந்த ஒரு நிகழ்வை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார். இது பற்றி அவர் கூறுகையில், படப்பிடிப்பில் முக்கியமான காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது. அதற்காக செயற்கை மழையை தயார் செய்ய முயற்சி செய்தோம் சில காரணங்களால் அதனை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. இயக்குனர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதே போன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது. எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள் என்றார். சஞ்ஜீவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து