முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் மஞ்சக்குருவி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      சினிமா
Ma  cakkuruvi 2022-10-01

Source: provided

வி.ஆர்.கம்பைன்ஸ் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், அரங்கன் சின்னதம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மஞ்சக்குருவி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மஞ்சக்குருவி படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக 'குங்ஃபூ மாஸ்டர்' ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அரங்கன் சின்னதம்பி, இசை சௌந்தர்யன், ஒளிப்பதிவு ஆர்.வேல், எடிட்டிங் ராஜா முகமது, சண்டை மிரட்டல் செல்வா, கலை கே.எம்.நந்தகுமார், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,. இந்த படத்தில் தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடலான 'கூட பொறந்த பொறப்பே'... என தொடங்கும் பாடல், கல் நெஞ்சையும் கறைய வைக்கும் வகையில் சொளந்தர்யனே தனது குரலில் பாடியுள்ளார். பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயிரோட்டமாக சொல்லி இருக்கும் படமாக மஞ்சக்குருவி உருவாகியுள்ளதாக இயக்குனர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து