முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவி ராகுல் இயக்கும் ரவாளி

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      சினிமா
Rawali 2022-10-01

Source: provided

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் வட இந்திய இளைஞனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடிப் போய் திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதை தான் ரவாளி. ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து