முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை குஷ்புவுக்கு கோல்டன் விசா

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      உலகம்
Khushbu 2022-10-02

Source: provided

துபாய் ; பிரபல நடிகை குஷ்புவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 

சினிமா உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதன் காலாவதி 10 வருடங்களாகும். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பார்த்திபன், திரிஷா உள்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை குஷ்புவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த நிகழ்ச்சியில் அமீரக அரசு சேவை நிறுவனமான இ.சி.எச். டிஜிட்டல் தலைமை நிர்வாகி இக்பால் மார்க்கோனி கோல்டன் விசாவை குஷ்புவுக்கு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து