முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதியான இடமாக காஷ்மீரை மாற்றுவோம் : உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
Amit-Shah 2022 09 03

Source: provided

பாரமுல்லா : அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்றுவோம் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

1990 ஆம் ஆண்டில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு 42,000 பேர் உயிரிழந்துள்ளனர். மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்றுவோம்.

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்த வரும் அப்துல்லாக்கள், முஃப்திகள் மற்றும் நேரு, காந்தி குடும்பத்தினரால் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடையவில்லை. சிலர் பாகிஸ்தானைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சார இணைப்புகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில், காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாரமுல்லா மக்களுடன் பேசுவோம், காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து