முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 1,150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
Bus 2022--09-21

Source: provided

சென்னை : ஆயுத பூஜை மற்றும் விஜிய தசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை, நேற்று விஜயதசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருந்தவர்களை தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் இன்று வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவார்கள் என்பதால் அவர்களது வசதிக்காக நேற்றும், இன்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் நேற்றும், இன்றும் என 2 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக 1,150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகம் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பஸ்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.tnstc.in என்கிற இணைய சேவையை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து