முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்குலியின் மனைவி டோனா மருத்துவமனையில் அனுமதி

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      விளையாட்டு
Ganguly 2022-10-05

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் தலைவருமான சவுரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலி. நடனக் கலைஞரான இவர் தற்போது சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள வூட்லண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டோனா கங்குலி கடந்த நான்கு நாட்களாக இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவு முதல் அவரது உடல்நலக்குறைவு தீவிரமடைந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் நேற்று காலை முதல் டோனா கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாசிஷ் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலி தற்போது தனது குடும்ப உறுப்பினர்களோடு மருத்துவமனையில் இருப்பதாக சினேகாசிஷ் தெரிவித்தார். இவர்களது மகள் சனா கங்குலி தற்போது லண்டனில் படித்து வருகிறார்.

டிவில்லியர்ஸ் அறிவிப்பால் ஆர்.சி.சபி. ரசிகர்கள் அதிர்ச்சி

இனி தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என டிவில்லியர்ஸ்தெரிவித்துள்ளார். “அடுத்த ஆண்டு நிச்சயம் நான் சின்னசாமி மைதானத்தில் நிச்சயம் இருப்பேன். ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுக்க தவறியதற்காக ரசிகர்கள் என்னை மன்னிக்கவும். ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் எனது வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நிச்சயம் நான் எந்தவொரு அணியையும் வழிநடத்தப் போவதில்லை. நான் கற்றதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 18 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு வீட்டில் கொஞ்ச நேரம் செலவிட முடிவதில் மகிழ்ச்சி. எனக்கு வயதாகிவிட்டது. லெஜெண்ட்ஸ் லீக் தொடர் மிகவும் வேடிக்கையாக உள்ளது. எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை இருந்தது. ஒரு கண்ணுடன் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். விரைவில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்தி அதிரடியை புகழ்ந்த சூர்யகுமார் யாதவ்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. தினேஷ் கார்த்தி மட்டும் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 46 ரன்களை குவித்தார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு பின் பேசிய சூர்யகுமார் யாதவ், “தினேஷ் கார்த்தி அதிரடியை காட்ட கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அவரது அதிரடியை பார்த்த பின் என்னுடைய 4-வது இடத்திற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. நான் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்றாலும் அந்த நாள் தொலைவில் இல்லை என தோன்றுகிறது“ என்று விளையாட்டாக தெரிவித்தார். மேலும் நான் அவருடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க நினைத்தேன். ஆனால் அது இன்று நடக்கவில்லை என்றார்.

3-வது டி-20யில் மோசமான சாதனை படைத்த ரோகித்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு மோசமான சதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 43 முறை ஆட்டம் இழந்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக அயர்லாந்தின் கெவின் ஓ பிரெய்ன் 2-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் ஆசிய கோப்பை போட்டி: யு.ஏ.இ.யை வீழ்த்தியது இந்தியா

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து