முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023, ஜூனில், 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
3rd-Charles 2022-10-06

Source: provided

லண்டன்: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். அதை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். கடந்த மாதம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறினார். 

இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு 74 வயதாகிறது. இதன்மூலம், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார். இதன் மூலம், அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக் கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். 

பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ராணி இரண்டாம் எலிசபெத் 1953-ல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்தனர். ஆனால் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து